ஓடும் ஆம்னி பேருந்தில் 13 வயது சிறுமி பலாத்காரம்...!

Published : Dec 27, 2018, 12:09 PM IST
ஓடும் ஆம்னி பேருந்தில் 13 வயது சிறுமி பலாத்காரம்...!

சுருக்கம்

ஓடும் சொகுசு பேருந்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஓடும் சொகுசு பேருந்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் வேன் ஓட்டுநராக பொன்னுசாமி மகன் விக்னேஷ் (19) பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. இவர், வேனில் அரச்சலூர் சிறுமியிடம் நன்கு பழகி உள்ளார். இதற்காக, வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளத்திலும் உரையாடி வந்துள்ளார்.

 

இந்நிலையில், விக்னேஷ், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 22ம் தேதி அவரை கடத்தி சென்றார். சிறுமியை காணாததால் அவரது பெற்றோர்கள் அரச்சலூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிறுமியை விக்னேஷ், திருப்பூர் மாவட்டத்தில் ரகசியமான இடத்தில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருப்பூருக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் விக்னேஷை கைது செய்தனர். 

சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷ் என்னை கடத்திச் சென்று ஓடும் சொகுசு பேருந்தின் சிலீப்பர் சீட்டில் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிவித்துள்ளார். மேலும் விக்னேசிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.  இதனையடுத்து விக்னேஷ் மீது சிறுமியை கடத்தியது, போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!