தனியாக செல்லும் பெண்களின் அழகான, எடுப்பான மார்பகங்களை தொடும் இளைஞர்.. 100 பேரிடம் சில்மிஷம் செய்தது அம்பலம்.!

By vinoth kumar  |  First Published Oct 15, 2021, 7:13 PM IST

இவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பார்த்தவுடன் அவர்களின் அங்கங்களை தொட்டு பார்ப்பதைய பொழப்பாக வைத்துள்ளார்.இதையடுத்து வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரையில் கண்ணில் பட்ட பெண்கள் மீதெல்லாம் தினேஷ்குமார் கை வைத்து சேட்டை செய்து வந்துள்ளான். 


சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து வாலிபர் ஒருவர் பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாத நகரைச் சேர்ந்தவன் தினேஷ்குமார் (20). இவர் புதுடெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறார். ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக எழும்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து கொண்டே பயிற்சி பெற்று வருகிறான். இவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பார்த்தவுடன் அவர்களின் அங்கங்களை தொட்டு பார்ப்பதைய பொழப்பாக வைத்துள்ளார். 

Tap to resize

Latest Videos


  
இதையடுத்து வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரையில் கண்ணில் பட்ட பெண்கள் மீதெல்லாம் தினேஷ்குமார் கை வைத்து சேட்டை செய்து வந்துள்ளான்.இந்நிலையில், கடந்த 10-ம் தேதி அண்ணாநகர் 2-வது மெயின் ரோட்டில் ஆவின் பூத் அருகில் தனது தந்தையுடன் தனது 2 மகள்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தினர். அப்போது அவரது இளைய மகள் முன்னால் தனியாக நடந்து சென்றார். இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த  தினேஷ்குமார் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே அந்த பெண் கூச்சலிட்டதும் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுவிட்டார். 

இதுதொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து,  சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர் யார்? என்று அடையாளம் தெரியாத நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இருசக்கர வாகனத்தின் நெம்பரை வைத்து தினேஷ்குமாரை போலீசார் அடையாளம் கண்டனர். பின்னர் எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த தினேஷ் குமாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.  தனியாக நடந்து செல்லும் பெண்களை பார்த்தவுடன் என்னை அறியாமலேயே அந்த எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்று தவறாக நடந்துள்ளதாகவும் கடந்த ஓராண்டாக இது போன்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளான். இதனையடுத்து, தினேஷ்குமார் மீது அண்ணாநகர் மகளிர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

click me!