தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கரம்…..பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எய்ம்ஸ் பெண் மருத்துவர் பலாத்காரம்…!

Published : Oct 15, 2021, 06:11 PM IST
தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கரம்…..பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எய்ம்ஸ் பெண் மருத்துவர் பலாத்காரம்…!

சுருக்கம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, பெண் மருத்துவரை அவருடன் பணியாற்றும் மூத்த அதிகாரி பலாத்காரம் செய்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, பெண் மருத்துவரை அவருடன் பணியாற்றும் மூத்த அதிகாரி பலாத்காரம் செய்துள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கிடையாது என்று அவ்வப்போது வெளியாகும் தரவுகள் கூறிக்கொண்டே உள்ளன. குறிப்பாக நாட்டின் தலைநகரில் அரங்கேறும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தான் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்கிறது. ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கிவீசப்பட்டது உலகையே உலுக்கியது. அதன் பின்னராவது டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரித்துள்ளதா என்றால் அடுத்தடுத்து நிகழும் கொடூரங்கள், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

அந்தவகையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட கொடூர நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவருக்கே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சக ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின் போது பெண் மருத்துவரை அவருடன் பணியாற்றும் மூத்த அதிகாரி பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.

பெண் மருத்துவரை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில் அவரே அங்கிருந்து ஓட்டம் பிடித்து உயிர்பிழைத்துள்ளார். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தான். அதன் அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவமனியின் மூத்த அதிகாரி மீது ஹாஸ் ஹஸ் காவல் நிலைய போலீஸார் கற்பழிப்பு குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்