முரட்டுதனமாக பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்..!

Published : Oct 15, 2021, 05:55 PM IST
முரட்டுதனமாக பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்..!

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே மலைமுகட்டுப் பகுதியில் இருளர் இனப் பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பெண்ணின் மகன் தனது தாயை காணவில்லை என்று பல்வேறு இடங்களில்  தேடிக்கொண்டிருந்தார். அப்போது, புதர் அடங்கிய பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் மயங்கி இருப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்தான்.

திருக்கழுக்குன்றம் அருகே சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே மலைமுகட்டுப் பகுதியில் இருளர் இனப் பெண்ணை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்பெண்ணின் மகன் தனது தாயை காணவில்லை என்று பல்வேறு இடங்களில்  தேடிக்கொண்டிருந்தார். அப்போது, புதர் அடங்கிய பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் மயங்கி இருப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்தான்.

இதனையடுத்து, அப்பகுதியினர் மீட்டு அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரம் செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில் காயலான் கடையில் வேலை செய்யும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் நேற்று மாலை சிறுவனை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!