அட ஆண்டவா.. பரோட்டா சாப்பிட்டு உறங்கிய கல்லூரி மாணவர்.. அதிகாலையில் மூச்சி திணறி துடிதுடித்து உயிரிழப்பு..

Published : Oct 15, 2021, 11:38 AM IST
அட ஆண்டவா.. பரோட்டா சாப்பிட்டு உறங்கிய கல்லூரி மாணவர்.. அதிகாலையில் மூச்சி திணறி துடிதுடித்து உயிரிழப்பு..

சுருக்கம்

பரோட்டா சாப்பிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொளத்தூரில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து உயிரிழப்பு,

பரோட்டா சாப்பிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொளத்தூரில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து உயிரிழப்பு, சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழப்பு, மட்டன் பிரியாணி சாப்பிட்டவர் மரணம், சிக்கன் கிரேவி சாப்பிட்டவர் உயிரிழப்பு என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இது பிரியாணி மற்றும் சிக்கன் பிரியர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போது பரோட்டா சாப்பிட்டு உறங்கிய இளைஞர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

சென்னை கொளத்தூர் விவி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் அரியகுட்டி, இவரது மகன் சிபி சங்கமித்திரன்(17) அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். நேற்று இரவு கடையில் பரோட்டா சாப்பிட்டு விட்டு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்து உறங்கினார். அதிகாலையில் திடீரென சிபி சங்கமித்ரனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது, பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது அங்கு பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மகன் சி பி சங்கமித்திரன் இறந்துவிட்டதை கேள்விப்பட்ட பெறோர்கள் தலையில் அடித்து  கதறி அழுதனர். 

ஆனாலும் தனியார் வாகனத்தில் அவரது பெற்றோர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கேயும் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பின்னர் பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொளத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரோட்டா சாப்பிட்டதால் தான் கல்லூரி மாணவர் உயிரிழந்தாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர். அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!