சென்னை இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா நெட்வொர்க்…. பொறிவைத்து பிடித்த போலீஸ்.!

By manimegalai aFirst Published Oct 14, 2021, 6:48 PM IST
Highlights

சுபா, காயத்திரி ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்ட போலீஸார் கஞ்சா விற்பனை செய்து வாங்கிக் குவித்த தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

சுபா, காயத்திரி ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்ட போலீஸார் கஞ்சா விற்பனை செய்து வாங்கிக் குவித்த தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை காசிமேடு அடுத்த இந்திராநகரில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாக போலீஸாருக்கு புகார்கள் குவிந்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். முதலாவதாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 19 வயதான முகம்மது அலி என்பவனை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

முகம்மது அலி, அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சுபா, சந்தியா ஆகிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்வதாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கஞ்சா வியாபாரி காயத்திரியை செல்போனில் தொடர்புகொண்ட தனிப்படை போலீஸார், தங்களுக்க்கும் கஞ்சா தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.

அழைத்தது போலீஸ் என்பதை அறியாமல் திருவொற்றியூர் குளத்தங்கரை அருகே காய்கறி கூடையில் கஞ்சாவை மறைத்து எடுத்துவந்த காயத்ரி போலீஸிடம் வசமாக சிக்கினார். இதையடுத்து காயத்ரி வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டபோது சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்ற பணத்தில் வாங்கிய 10 சவரன் தங்கம், 100 கிராம் வெள்ளி நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகம்மது அலி, சந்தியா ஆகியோர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. காயத்திரி, சுபா ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

click me!