எந்த நேரமும் போதையில் டார்ச்சர்.. தூங்கிக்கொண்டிருந்த கணவரை துடிக்க துடிக்க கொன்ற மனைவி..!

Published : Oct 13, 2021, 06:47 PM IST
எந்த நேரமும் போதையில் டார்ச்சர்.. தூங்கிக்கொண்டிருந்த கணவரை துடிக்க துடிக்க கொன்ற மனைவி..!

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே குளியாண்டிப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மலர் (34). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, மாதேஷ் பர்கூர் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன், மலருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த மாதேஷ், மனைவியை கண்டித்துள்ளார். 

எந்நேரமும் குடித்து விட்டு போதையில் டார்ச்சர் செய்த கணவனை கத்தியால் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே குளியாண்டிப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மலர் (34). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, மாதேஷ் பர்கூர் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன், மலருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த மாதேஷ், மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதனையடுத்து, உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே, அவர்களது மகளுக்கு திருமணமாகி விட்டதால், குளியாண்டிப்பட்டி பகுதிக்கு வந்தனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாதேஷ், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். தினமும் போதையில் வந்து தகராறு செய்ததால் மலர் வேதனையடைந்தார். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், மகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த மாதேஷ் இதுபற்றி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். விடிவதற்குள் மகளை, அவளது கணவன் வீட்டில் விட்டு வராவிட்டால், உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு தூங்கியுள்ளார். ஆத்திரமடைந்த மலர், நள்ளிரவில் தூங்கிய கணவரின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாதேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அவரது மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!