திருமணமான பெண்ணை வயகாட்டில் வைத்து4 பேர் கும்பல் பாலியல் வன்புணர்வு... புல்லறுக்க போனபோது பயங்கரம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2021, 6:28 PM IST
Highlights

வயலில் புல்லறுக்கச் சென்ற பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

வயலில் புல்லறுக்கச் சென்ற பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆறு மாத குழந்தை முதல் 60 வயது குமரி வரை நாட்டில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக கூறி கற்பழிப்பு  செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, கட்டிய மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவது என பல்வேறு கோணங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறையும், அரசும் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 

 

இந்த வரிசையில் திருமணமான பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி நான்கு பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜலவார் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான தலித் பெண், 
தனியாக வயலுக்கு புல்லறுக்க சென்றார், அந்தப் பெண் தனியாக செல்வதைப் பார்த்து 4 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்தது. வயலில் இறங்கி அந்த பெண் புல்லறுத்தபோது, அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட அந்த கும்பல் அந்த பெண்ணை சுற்றி வளைத்து புதருக்குள் தூக்கிச்சென்ற அந்த பெண்ணின் ஆடைகளை கலைந்து அத்துமீறியது, ஆனால் அந்த பெண் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்து கூச்சலிட்டார், அதில் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டிய அந்தப் பெண்ணை மிரட்டியதுடன், நான்கு பேரும் மாறி மாறி அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்தனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவோம் எனக் கூறி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

பின்னர், தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த பெண் கணவனிடம் கூறி கதறினார், அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர், தற்போது அந்த பெண்ணின் உடல் நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்த நிலையில், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அதில் ஒருவரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், ஒரு தலித் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செதிருப்பது வெட்கக் கேடானது என்றும், வேதனை கரமானது என்றும், இதற்கு பாஜக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளனர். 
 

click me!