தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார்.
ஒடிசாவில் இருந்து 101 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்க முயற்சி செய்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான தாய்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?
அவர்களுக்கு 11.02.2024 ஆம் தேதி வெளிமாநிலத்திலிருந்து ரேடியல் ரோடு வழியாக கார்களில் கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ரேடியல் ரோடு காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 18.00 மணியளவில் வெளிமாநில பதிவெண்கள் கொண்ட இரு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 101 கிலோ எடை கொண்ட ரூபாய் பத்து இலட்சத்து பத்தாயிரம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது.
undefined
இதையும் படிங்க: வீட்ல யாரும் இல்ல.. உல்லாசமா இருக்கலாம் வர்றியா! இளம்பெண்ணை நம்பி சென்ற இன்ஜினியர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
அதனை தொடர்ந்து வாகனத்திலிருந்த மூன்று நபர்களை விசாரணை செய்ததில் 1. ஜீபன் பிஸ்வாஸ் (30) ஒடிசா. 2. பலராம் புஜாரி (25) ஒடிசா 3. சாஷி குமார் (32) கர்நாடகா எனவும், அவர்கள் அந்த கஞ்சாவினை ஒடிசா மாநிலத்திலிருந்து வாங்கி வந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கு எடுத்துசெல்வதாக கூறியதை தொடர்ந்து அவர்களை கைது செய்து, கஞ்சாவை கொண்டு வர பயன்படுத்திய இரு கார்களையும், அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கைப்பற்றப்பட்டது. இது சம்மந்தமாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.