நேத்ராவை அடித்துக் கொன்ற இரும்புக் கம்பியில் இரண்டு பேரின், கைரேகைகள் இருப்பதாக அறிக்கையில் வெளியாகியுள்ளது. உடனே சந்தேகத்தின் பேரில் கணவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பெங்களூருவில் காலை உணவு சமைத்துக் கொடுக்க தாமதமானதால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக காவல் நிலையத்தில் 17 வயது மகன் சரணடைந்த நிலையில் திடீர் திருப்பமாக சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புராவில் உள்ள நீதிபதி பீமய்யா லேஅவுட்டில் வசித்து வந்தவர் நேத்ராவதி (40). இவர்களுக்கு சொந்த ஊர் முலபாகிலு என்பதால் அங்கு வீடு கட்டி வருகின்றனர். கட்டுமானப் பணிகளை பார்வையிட தந்தை சந்திரப்பா அங்கு சென்று விட்டார். இவரது 17 வயது மகன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில், தாயுடன் ஏற்பட்ட தகராறில் இரவு சாப்பிடாமல் மகன் தூங்க சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்..!
இந்நிலையில் கடந்த 2ம் தேதி காலையில் கல்லூரிக்கு அவசர அவசரமாக கிளம்பிய போது காலை உணவு சமைக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த மகன் தாய் நேத்ராவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டதாக கே.ஆர்.புரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய இரும்புக் கம்பியை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தடயவியல் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேத்ராவை அடித்துக் கொன்ற இரும்புக் கம்பியில் இரண்டு பேரின், கைரேகைகள் இருப்பதாக அறிக்கையில் வெளியாகியுள்ளது. உடனே சந்தேகத்தின் பேரில் கணவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் நேத்ராவதிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் என்னை திட்டியுள்ளார். மேலும் வீட்டில் சரியாக உணவு சமைக்காமல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: வீட்ல யாரும் இல்ல.. உல்லாசமா இருக்கலாம் வர்றியா! இளம்பெண்ணை நம்பி சென்ற இன்ஜினியர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இந்நிலையில், கடந்த 2ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரப்பா இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த தன்னுடைய மகனிடம் கூறியுள்ளார். உடனே இந்த கொலை பழியை தான் ஏற்று கொள்வதாகவும், தான் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் அடைப்பார்கள் என்று கூறிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரப்பாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.