தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கா.? தமிழக அரசு என்ன சொல்கிறது?

By Raghupati RFirst Published Apr 2, 2023, 8:17 AM IST
Highlights

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கட்டுக்குள் வந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.இந்தியா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கொரோனா அதிகரித்து வருவதால் தமிழக அரசு கூடிய விரைவில் ஊரடங்கு விதிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ம.சுப்பிரமணியன். “கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே. வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

click me!