சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பயணர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் மூலம் 9 பேர் வரை பாதிக்கப்படலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு கோவிட்-19 பாசிட்டிவ் பயணி ஒருவருடன், பாதி அளவு நிரம்பிய மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் போது 9பேர் வரை நோய் தொற்றுக்கு ஆளாகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஐசிஎம்ஆர் வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக இருந்தாலோ, அல்லது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ அல்லது பயணிகள் அதிக தூரம் பயணம் செய்தாலோ, நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் சமீபத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான வைரஸ் நோய்கள் புத்தகத்தில் எழுதியுள்ளனர். இந்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் கோவில்-19 தொற்று சூழ்நிலையை உருவகப்படுத்த 21G தாம்பரம் முதல் பிராட்வே பேருந்து வழித்தடத்தை பயன்படுத்தினர்.
36.1 கிலோமீட்டர் பாதையில் உள்ள 40 நிறுத்தங்களில் ஒவ்வொன்றிலும் 5 பயணிகள் ஏறுவார்கள் அல்லது இறங்குவார்கள் என்று நினைத்துக்கொண்டனர். எல்லா நேரங்களிலும் பேருந்தில் 20 பயணிகள் இருப்பார்கள் என கருதினர். ஆரம்ப கட்டத்தில் பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவருக்கு (SARS-CoV-2) சார்ஸ் கோவிட்-19 தொற்று இருப்பதாக நாங்கள் கருதினோம் என ஆய்வின் முதல் எழுத்தாளர் அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்ட்ருமென்ட் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் கனேஷ் ராம் ஆறுமுகம் கூறினார். இந்த கணித மாதிரியானது, பாதிக்கப்பட்ட நபர்களை அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் சீரற்ற முறையில் பேருந்துக்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கிறது. இதன் மூலம், பேருந்து வழித்தடங்களில் இரண்டாம் நிலை நோய்தொற்றுகளின் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது.
வேகமெடுக்கும் கொரோனா..! ஒரே நாளில் 2,151 பேருக்கு பாதிப்பு... அலெர்ட் செய்யும் மத்திய அரசு
வைரஸ் இனப்பெருக்க எண் (R0) தொற்று முகவர்களின் பரவும் தன்மையை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு தொற்றுநோயியல் அளவீடு இது. பயணத்தின் காலம், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் உள்ள நேரம், மொத்த தொற்று, மொத்த பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுவாச இடத்தின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த (R0) மதிப்பிடப்பட்டது. பயணத்தின் முடிவில், R0 1.04 மதிப்பை எட்டுகிறது, ”என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறையின் உதவிப் பேராசிரியர் கமலானந்த் கிருஷ்ணமூர்த்தி கூறினார். மேலும், ஒவ்வொரு பயணத்திற்கும் ஒன்பது பேர் வரை பேருந்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நோய் தொற்றுக்கு ஆளாவர் என அவர் கூறினார்.
தொற்று அபாயத்தைக் குறைக்க மக்கள் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முடிந்த வரை கூட்ட நெரிசலில் செல்வதையும், பேருந்து பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.