
இந்தியாவில் 146 நாட்களில் அதிகபட்சமாக 1,590 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இது 146 நாட்களில் அதிகபட்சம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஆறு கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் இருந்து தலா ஒரு இறப்பு என்று பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் குணமடைந்துள்ளதால், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,62,832 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு விகிதம் 98.79 சதவீதமாக உள்ளது. வழக்கு இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் இதுவரை 220.65 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,19,560 கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டது. இதுவரை 92.08 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினசரி கொரோனா நோயாளிகள் படிப்படியாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். மேலும் பொது சுகாதாரத் தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?