Rajasthan : ராஜஸ்தான் முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கொரோனா.!!

Published : Apr 04, 2023, 05:58 PM IST
Rajasthan : ராஜஸ்தான் முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கொரோனா.!!

சுருக்கம்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கு  கொரோனா தொற்று  (கோவிட் -19) உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தாலும், அடுத்த சில நாட்களுக்கு அவர் தனது இல்லத்தில் இருந்து வேலை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனிமையில் இருக்கிறார்.

இதையும் படிங்க..ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “நான்  கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அடுத்த சில நாட்களுக்கு நான் எனது வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெளியிட்ட ட்வீட்டில், “கொரோனா பரிசோதனையில் எனது ரிசல்ட் பாசிட்டிவாக வந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் முழுவதுமாக தனிமையில் இருக்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். "என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க..நிலக்கரி சுரங்க விவகாரம்: டெல்டா பகுதிகளை விட்டுடுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

PREV
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்