உஷார் !! இந்தியாவில் புது வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு.. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

By Thanalakshmi VFirst Published Jul 7, 2022, 11:36 AM IST
Highlights

New Covid Omicron sub-variant: இந்தியாவில் ஒமைக்ரான் புது வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

New Covid Omicron sub-variant: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 16,159 ஆக இருந்த நிலையில், இன்று 18,936 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டது. அப்போது ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி பதிவானது. பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர் பிப்ரவரி மாதத்தில் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் குறைந்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ச்சிக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு தற்போது 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:எகிறி அடிக்கும் கொரோனா.. 18 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. மீண்டும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்..

இதனிடையே இந்தியாவில் ஒமைக்ரான் புது வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் எனும் கொரோனாவைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டத். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்த ஒமைக்ரான் வைரஸ் 5 வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிய வந்தது. 

அதாவது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக ஒமைக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் படி, கொரோனாவின் புதிய வடிவமான பிஏ-2.75 என்ற வகை வைரஸ் பரவி வருவதை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக இந்த உருமாறிய வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் மிக அதிகளவில் இருப்பதாக நிருப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் புதிய வகை ஒமைக்ரான் இருப்பதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

மேலும் படிக்க:மக்களே உஷார்... கைமீறிப் போகும் கொரோனா , தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? அமைச்சர் எச்சரிக்கை.

இந்நிலையில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய பிஏ 2.75 வைரஸ் பாதிப்பு தீவிரம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வைரஸ் இந்தியாவில் உருவானது  என்றும் வெளிநாடுகளில் இருந்து அங்கு பரவயில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை மறுத்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டா, கொரோனா வைரஸ் பிறழ்வு வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு இந்த புது வகை வைரஸ் தான் காரணமா என்பதை உறுதிப்படுத்த இயலாது என்று கூறினார்.  இதனிடையே இந்தியாவில் ஒமைக்ரான் புது வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் 3 ஆயிரத்தை நெருங்கிறது தினசரி கொரோனா… சென்னையில் 1,062 பேருக்கு தொற்று!!

click me!