கொரோனாவால் பாதிப்புக்கு ஆளானவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் தானாக மருந்துகள் உட்கொள்ளக் கூடாது என்றும், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அவ்வாறு செய்தால் மேலும் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுவகை கொரோனா பாதிப்பு
சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகளிர் சிறுநீரகவியல்,கர்ப்பபை இறக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மருத்துவர்கள் மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த மாநாட்டில் 15 நாடுகள், 22 மாநிலங்களில் இருந்து காணொளி காட்சி மற்றும் நேரடியாகவும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் நாடு முழுவதும் சுமார் 10 மாநிலங்களில் கொரானா பரவல் வேகம் அதிகரித்திருப்பதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை சுமார் நாளொன்றுக்கு 2000 பேர் என்ற அளவில் தொற்று பாதிப்பு இருப்பதாகவும் மேலும் பிஏ2., பிஏ4., பிஏ 5 போன்ற வகை கொரோனா தொற்று பாதிப்புகள் எண்ணிக்கை காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
undefined
நம்ம செஸ்...நம்ம பெருமை... ஒலிம்பியாட் போட்டி பேருந்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குழந்தைகள் எளிதில் தாக்கும் கொரோனா
இந்நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதாகவும் தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கக் கூடிய வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை தொற்று பாதிப்பு குறைவு என்றாலும் அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு முறைகளான முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்தார். தற்போதைய தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு எளிதில் பரவி விடுவதாகவும் இதன் காரணமாக அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் முக கவசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை.. இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..
10 ஆம் தேதி தடுப்பூசி முகாம்
தற்போது வரை தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 95 சதவீதம் நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் உடல் நலம் நலம் பெற்று திரும்பி வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருந்தகங்களில் தன்னிச்சையாக மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது எனவும் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இணை நோய்கள் இருப்பவருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படுகிற பட்சத்தில் அவர்கள் கட்டாயம் மருத்துவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என தெரிவித்தார். வருகிற 10-ஆம் தேதி தமிழக முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாகவும் எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் அரசியல் தொடர்பான எந்த கூட்டங்களாக இருந்தாலும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை.. பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..