கொரோனா பாதிப்பு கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதை அடுத்து கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,793 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டவம் ஆடியது. இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடியாக நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதை அடுத்து கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- எடப்பாடியாருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜூ..!
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்;-கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,793 பேருக்கு கொரோனா பாததிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,18,839ஆக உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 3,206 பேருக்கும், மகாராஷ்டிராவில் 6,493, தமிழ்நாட்டில் 1,461, டெல்லியில் 628, கர்நாடகாவில் 617 உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- India corona : அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்!
கடந்த 24 மணி நேரத்தில், 9,486 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,97,092 உயர்ந்துள்ளது. தற்போது 96,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா காரணமாக 27 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் நேற்று 19,21,811 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 86.14 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.