இளையராஜா குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட 43 வருஷத்து பழைய செய்தி...

Published : Sep 14, 2019, 05:39 PM IST
இளையராஜா குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட 43 வருஷத்து பழைய செய்தி...

சுருக்கம்

’அப்பாவுடன் முதன்முதலாக நான் இணைந்து இசையமைக்கும் படத்தில் இசைப்பிரியர்களை நிச்சர்யம் ஆச்சரியப்படுத்துவோம்’என்று பிரபல இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய வாரிசுமான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’அப்பாவுடன் முதன்முதலாக நான் இணைந்து இசையமைக்கும் படத்தில் இசைப்பிரியர்களை நிச்சர்யம் ஆச்சரியப்படுத்துவோம்’என்று பிரபல இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய வாரிசுமான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘மாமனிதன்’படத்தின் மூலம் இயக்குநர் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதியும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்துவரும் நிலையில் இதில் இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைப்பார்கள் என்று சீனு ராமசாமி தகவல் வெளியிட்டிருந்தார். ஆனால் அத்தகவலை ராஜா தரப்போ யுவனோ உறுதி செய்யவில்லை. ஏனெனில் தாம் பெரும் மரியாதை வைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தவிர [மெல்லத் திறந்தது கதவு] வேறு எந்த இசையமைப்பாளருடனும் ராஜா இணைந்து பணியாற்றியதில்லை. இன்னொரு பக்கம் தனது படங்களின் பின்னணி இசை வேலைகளுக்கு மூத்த மகன் கார்த்திக் ராஜாவைப் பயன்படுத்தியிருக்கிறாரே ஒழிய யுவனை ராஜா அழைப்பதில்லை.

இந்நிலையில் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்றுவதை இன்று மதியம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார் யுவன். அப்பதிவில்,...முதல்முறையாக அப்பாவுடன் ‘மாமனிதன்’படத்துக்காக இணைந்து பணியாற்றுகிறேன்...இப்படத்தின் பாடல்கள் நிச்சயம் இசைப்பிரியர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்’என்று பதிவிட்டுள்ளார். ரொம்பப் பழைய நியூஸா இருக்கே யுவன் ‘அன்னக்கிளி’வந்த 1976 லருந்து கடந்த 43 வருஷமா இசை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துற ஒரே வேலையை மட்டும்தான செஞ்சிக்கிட்டிருக்காரு?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!