
சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த சீரியல் நடிகை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்று தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதில் தனது தோழி மூலம் அறிமுகமான கீழ்கட்டளையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்ததாகவும், 2019ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், திடீரென தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தன்னை ராஜேஷ் விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்ற ராஜேஷ், அங்கு உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அந்த நடிகை, அதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், உடலுறவிற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்வது போல் நாடகமாடியதாகவும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: முட்டி வரையுள்ள குட்டை உடையில் அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்கள்... கூடும் கிளாமரால் குழப்பத்தில் ரசிகர்கள்!
மேலும் தொடர்ந்து தன்னுடன் எடுத்து வைத்திருந்த ஆபாச படங்களை வைத்து மிரட்டி சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் அளவிற்கு தன்னிடம் இருந்து பணம் பறித்ததாகவும், 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வதாகவும் ராஜேஷ் கூறியதாக சின்னத்திரை நடிகை புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சித்ராவின் மரணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் பதில் என்ன தெரியுமா?
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ராஜேஷ் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாக தேடி வருவதாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.