
பல எதிர்பாராத மரணங்கள் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதில் இருந்து மீண்ட பின்னர், உடல் நலம் தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தது, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இவரை தொடர்ந்து பிரபல இளம் இசையமைப்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் கொரோனா பாதிப்பு காரணமாக இறக்க வில்லை என்பதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு வெளியான விசிறி திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமானவர், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான நவீன் ஷங்கர். கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது இழப்பு இவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.