
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைகிறார். ட்விட்டுகளை போட்டே, பல முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தலைவலி கொடுத்த சுசி, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்குமே உள்ளது.
இவர் உள்ளே வருவது பற்றிய புரோமோ ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது போட்டியாளர்கள் யார் யார் எப்படி என? சுசி அனைவருக்கும் ஒரு இமோஜி கொடுத்து தன்னுடைய கருத்தை தெரிவிப்பது போன்ற புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
சுரேஷுக்கு தலையில் கட்டு போட்டிருக்கும் இமோஜியை கொடுக்கிறார். ரியோ என்ன தேடலில் இருக்கிறார் என்பது தனக்கு தெரிய வில்லை என்றும், அதற்க்கு ஏற்ற எமோஜியை கொடுக்கிறார். பின்னர் அங்கு உள்ள அனைவருக்கு ஒவ்வொரு இமோஜியை கொடுக்கிறார். அதிலும் அர்ச்சனாவை கொஞ்சம் வெளுத்து வாங்கி அதிகம் பேசாதே என்கிற எமோஜியை கொடுக்கிறார். இவரது இந்த செயலே பலரையும் முதல் நாளே காண்டாக செய்வதையும் காண முடிகிறது.
தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.