
பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் குறைவில்லாமல் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 28வது நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியே செல்லும் நிலையில், மற்றொரு போட்டியாளர் உள்ளே நுழைய உள்ளார். இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
சுசி லீக்ஸ் சர்ச்சை மூலம், கோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்த பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே வருகிறார் என பல தகவல்கள் உலா வந்த நிலையில் , அதனை உறுதி செய்வது போல் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார் சுசித்ரா.
தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கமலிடம் பேசும் சுசித்ரா கூறும்போது, ‘ஒவ்வொரு சீசனை விட இந்த தடவை போட்டி ரொம்ப கடுமையாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது என்று கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் சுசித்ரா. சுசித்ராவின் வருகையை சிலர் மகிழ்ச்சியுடன் சிலர் வரவேற்றாலும், சிலரது முகத்தில் இப்போதே அச்சம் ஒட்டிக்கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.
அந்த புரோமோ இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.