ஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ்... வைரலாகும் இளம் நடிகையின் சேலஞ்ச்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 18, 2020, 10:40 AM IST

தெலுங்கில் வெளியான ஆர்.எக்ஸ்.100 படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகை பாயல் ராஜ்புட். 


இந்தியாவில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, ஜிம் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள்ளேயே ஒர்க் அவுட் செய்வது போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

சிலர் இந்த லாக்டவுன் நேரத்தில் பொழுது போக்குவதற்காக புதுசு, புதுசாக சேலஞ்சுகளை களம் இறங்கி வருகின்றனர். முதலில் இமோஜி சேலஞ்ச், தலை கீழாக நின்று டீ-ஷர்ட் மாட்டும் சேலஞ்ச் என சோசியல் மீடியாவை திணறடித்து வருகின்றனர். அப்படி சோசியல் மீடியாவில் தற்போது தீயாய் பரவி வருகிறது தலையணை சேலஞ்ச் (Pillow Challenge)

தெலுங்கில் வெளியான ஆர்.எக்ஸ்.100 படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகை பாயல் ராஜ்புட். விளம்பர மாடலாக புகழ் பெற்ற இந்த ஆந்திர அழகி, 5 ஆண்டுகளுக்கு முன்பே இருவர் உள்ளம் என்ற படம் மூலம் தமிழில் வினய்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் வாய்ப்பு வராததால், தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த பாயல், தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஏஞ்சல் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டிற்கு வர உள்ளார். 

தற்போது வைரலாகி வரும் இந்த தலையணை சவாலில் பங்கேற்றுள்ளார். உடலில் துளியும் ஆடையில்லாமல் மஞ்சள் நிற தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு பாயல் ராஜ்புட் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாயல் ராஜ்புட்யை அடுத்து இந்த சவாலை  அடுத்து எந்த நடிகை ஏற்க போகிறார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். பாயலின் அதிரடி கிளிக்ஸ் இதோ.... 

 

 


 

click me!