15 மாத குழந்தைமுதல் 83 வயது பாட்டி வரை... குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா! இளம் இயக்குனரின் பதிவு!

By manimegalai aFirst Published May 30, 2021, 11:03 AM IST
Highlights

பிரபல இளம் இயக்குனரின் குடும்பத்தை சேர்ந்த 14  பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பல மன உளைச்சல்களில் இருந்து மீண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

பிரபல இளம் இயக்குனரின் குடும்பத்தை சேர்ந்த 14  பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பல மன உளைச்சல்களில் இருந்து மீண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவை தடுக்கும் பேராயுதமாக விளங்கி வருகிறது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள். 18 வயதை கடந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் சில சமயங்களில் துரதிஷ்ட வசமாக குழந்தைகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக வைத்து கொள்வதற்காவது, குழந்தைகள் வீட்டில் இருப்பவர்கள், எங்கும் வெளியே செல்லாமலும், அப்படியே சென்றாலும்... முகக்கவசம், சுகாதாரம், மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில்... ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி வேற லெவல் குத்தாட்டம் போட்ட ஷிவானி! வைரல் வீடியோ...
 

இந்நிலையில், அமலாபால் நடித்த 'ஆடை' மற்றும் 'மேயாத மான்' ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் ரத்னகுமார், தன்னுடைய குடும்பத்தில் மொத்தம் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி 20 நாட்களுக்கு பின் அதில் இருந்து மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: லாக் டவுன் நேரத்திலும் அடங்காமல் தாறு மாறு கவர்ச்சி காட்டும் யாஷிகா... சன்னி லியோனுக்கே டஃப் ஹாட் போட்டோஸ் !
 

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது... "5 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர்.  கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு நன்றி" என கூறியுள்ளார். இந்த பதிவு கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு🙏 🙏

— Rathna kumar (@MrRathna)

 

click me!