
கொரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவிற்கு, தற்போது இளம் நடிகரும் தயாரிப்பாளருமான மஞ்சுநாத் பலியாகி இருப்பது கன்னட திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னட திரையுலகில், 'சம்யுக்தா 2 ' மற்றும் 'கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா 'போன்ற படங்களை தயாரித்தும், ஒருசில படங்களில் நடித்தும் உள்ளவர் மஞ்சுநாத்.
இவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 35 வயதாகும் மஞ்சுநாத்யின்மரணம் கன்னட திரையுலகினர், அவரது நெருங்கிய நண்பர்கள், மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மஞ்சுநாத் 'ஜீரோ பெர்சென்ட் லவ்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், சில காட்சிகளே எடுக்க வேண்டி இருந்தது. இதற்கிடையே படத்தின் ஹீரோவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் பலர் இவரது மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.