'குக் வித் கோமாளி' கனி கையால் செய்த காரக்கொழம்பு சாப்பிட வீட்டுக்கே சென்ற சிம்பு..!

Published : Apr 20, 2021, 07:52 PM IST
'குக் வித் கோமாளி' கனி கையால் செய்த காரக்கொழம்பு சாப்பிட வீட்டுக்கே சென்ற சிம்பு..!

சுருக்கம்

சமீபத்தில் நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அறிவிக்கப்பட்டனர் கனி. இந்த நிகழ்ச்சியின் பைனலில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு, குக்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கு விருதுகளை வழங்கினார்.  

சமீபத்தில் நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அறிவிக்கப்பட்டனர் கனி. இந்த நிகழ்ச்சியின் பைனலில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு, குக்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கு விருதுகளை வழங்கினார்.

நார்த் இந்தியன் உணவுகளை விட, தென்னிந்திய சமையல்களில் சிறந்து விளங்கியவர் கனி. குறிப்பாக, வாழை தண்டை கூட போட்டு காரக்குழம்பு வைத்து அசத்தியுள்ளார். எனவே இவரை அனைவருமே காரை குழன்பு கனி என செல்லமாக அழைப்பது உண்டு. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட காரை குழம்பு கனி என்று பைனலில் போது, கிண்டல் செய்தார்.  

இந்த நிலையில் சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கனி. கனியின் கணவர் இயக்குனர் திரு தனது டுவிட்டரில் ’சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி என்றும் அவர்களது வருகை மிகுந்த ஆச்சரியம் அளித்தது என்றும் கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கனியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்த்து, ரசிகர்கள்... சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!