பிரபல இளம் நடிகர் விபத்தில் சிக்கி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!

Published : May 05, 2020, 11:33 AM IST
பிரபல இளம் நடிகர் விபத்தில் சிக்கி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!

சுருக்கம்

பிரபல இளம் நடிகர் பேசில் ஜார்ஜ், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல இளம் நடிகர் பேசில் ஜார்ஜ், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் தொடங்கியதில் இருந்து, அடுக்கடுக்காக பல பிரபலங்களின், மரண சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், பிரபல நடிகரும் மருத்துவருமான சேது, பழம்பெரும் நடிகர் விசு, ஏ.வி.எம்.சம்பத் ஆகிய கோலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து இறந்தனர்.

அதே போல், கடத்த வாரத்தில் மட்டும், பாலிவுட் திரையுலகை சேர்ந்த  பழம்பெரும் நடிகர், ரிஷி கபூர் மற்றும் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர் இர்பான் கான் ஆகியோர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தனர்.

மேலும் செய்திகள்: ஒன்லி 200 கொடுத்து உதவினால்... நடிகை ஸ்ரேயாவுடன் ஆட்டம் போடும் அதிர்ஷ்டசாலி நீங்களா கூட இருக்கலாம்!
 

இந்த சோகம் ஹாலிவுட் திரையுலகையும் விட்டுவைக்க வில்லை. கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டு பல பழம்பெரும் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பிரபல மலையாள இளம் நடிகர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: அஜித்தை கட்டிப்பிடித்திருக்கும் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தல - தளபதி போஸ்டர்ஸ்!
 

பேசில் ஜார்ஜ், மே 3 ஆம் தேதி இரவு, நண்பர்கள், லத்தீஷ் , சாகர், ஜெய் தீப், அமன் ,மற்றும் ரேமான் ஷேக் ஆகியோருடன் மட்டுவாப்புழாவில் இருந்து கொலென்சேரி  பகுதி நோக்கி பயணித்துள்ளனர். கார் அதிவேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து, எர்ணாகுளம் மாவட்டம், மேக்கமேடு  பகுதியில் கரண்ட் கம்மம் மற்றும் சில குடியிருப்பு பகுதியில் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டது .

இந்த கோர  விபத்தில், நடிகர் பேசில் ஜார்ஜ் உட்பட அவருடைய நண்பர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் அடிபட்டவர்கள் கோலஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் பேசில் ஜார்ஜ் நடிப்பில் கடந்த வருடம்,  Poovalliyum Kunjadum என்கிற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ