ஏமாற்றியதற்காக கைதாகி விடுவீர்கள் மை டியர்... நடிகர் சோனு சூட்டையே வெறுப்பேற்றிய ஏமாற்றுக்காரர்..!

Published : Aug 22, 2020, 11:07 AM IST
ஏமாற்றியதற்காக கைதாகி விடுவீர்கள் மை டியர்... நடிகர் சோனு சூட்டையே வெறுப்பேற்றிய ஏமாற்றுக்காரர்..!

சுருக்கம்

சமூக வலைதளங்களில் உதவி கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கும் உடனடியாக உதவி செய்து வருகிறார். அவரால் பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், ஏழை எளியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வில்லன் நடிகரான நடிகர் சோனு சூட் நிஜத்தில் ஹீரோவாக ஜொலிக்கிறார். சமூக வலைதளங்களில் உதவி கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கும் உடனடியாக உதவி செய்து வருகிறார். அவரால் பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பெயரில் ஒரு போலி ட்விட்டர் பக்கத்தைக் கண்ட சோனு சூட், மோசடி வியாபாரத்தை நிறுத்துமாறு அந்த ஐடியை எச்சரித்துள்ளார். இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில், அப்பாவி மக்களை ஏமாற்றியதற்காக நீங்கள் விரைவில் கைது செய்யப்படுவீர்கள் மை டியர். அதற்கு முன்னதாக உங்கள் மோசடி வணிகத்தை நிறுத்திவிடுங்கள் எனக்கூறியுள்ளார். தனது பெயரில் உள்ள ஒரு போலி ஜிமெயில் ஐடி குறித்த ட்வீட்டையும் அவர் ரீ-ட்வீட் செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று சோனு சூட் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில், இன்று மட்டும், 1,137 மெயில்கள், 19,000 பேஸ்புக் மெசேஜ்கள், 4,812 இன்ஸ்டா மெசேஜ்கள், 6,741 ட்விட்டர் மெசேஜ்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் உதவி கேட்டு மக்கள் அனுப்பியுள்ள மெசேஜ்கள். அனைவருக்கும் பதிலளிப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது. அதனால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். உங்கள் கோரிக்கைகளை நான் தவறவிட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!