மும்பை போலீசாரிடம் சீறிய சிபிஐ... சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 21, 2020, 8:22 PM IST
Highlights

சுஷாந்த் மரணமடைந்து சடலமாக கிடந்ததை முதலில் பார்த்த வீட்டு சமையல்காரர் நீரஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள், நடிகைகள் கொடுத்த அழுத்தத்தால் சுஷாந்த் சிங் கைவசம் இருந்த அனைத்து படவாய்ப்புகளும் கைவிட்டு போனதாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமே அவருடைய தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் சுஷாந்த் உயிரிழந்தின்  தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். 

இதுதொடர்பான வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகார் போலீசாரும் வழக்கை விசாரிக்க முற்பட்டனர். இதனால் சில பிரச்சனைகள் வெடித்தது. இதையடுத்து பீகார் போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று, வழக்கு விவரங்களை மும்பை போலீஸ், சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

இந்த விசாரணைக்காக 10 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து மும்பை வந்தது.  இந்த குழுவில் தடயவியல் நிபுணர்களும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த உள்ளனர். இன்று அதற்கான ஆவணங்களை மும்பை போலீசாரிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர். மேலும் சுஷாந்த் சடலத்தை முதன் முதலில் பார்த்த சமையல்காரர் நீரஜித்திடம் இருந்து முதற்கட்டவிசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 

சுஷாந்த் மரணமடைந்து சடலமாக கிடந்ததை முதலில் பார்த்த வீட்டு சமையல்காரர் நீரஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். சுஷாந்த் இறந்ததும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்த பொருட்களை சுஷாந்தின் உறவினர்கள் பீகாருக்கு எடுத்துச்சென்றதால் தடயங்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.
சட்ட விதிகளை மீறி போலீஸ் எப்படி சுஷாந்த்தின் உறவினர்களை பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என சிபிஐ அதிகாரிகள் போலீசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

click me!