
தமிழ் சினிமாவில் சிறு ரோல்களில் நடிக்க துவங்கி, தற்போது தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் மக்களை கவர்ந்து, முன்னணி காமெடியனாக உயர்ந்துள்ளவர் நடிகர் யோகி பாபு.
மேலும் கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவுடன், இவர் நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படத்திலும் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி குறித்து, ஒரு ட்விட் செய்துள்ளார் நடிகர் யோகி பாபு. அதில் "தன்னை பார்க்க வந்த ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி, மற்றும் ஜெயகுமாரின் உடல் நலனை விசாரித்து அனுப்பி வைத்தார் கலைஞர்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.