வடிவேலு - சிங்கமுத்து சொத்து பிரச்சனையில் அதிரடி திருப்பம்...!

 
Published : Jul 27, 2018, 05:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
வடிவேலு - சிங்கமுத்து சொத்து பிரச்சனையில் அதிரடி திருப்பம்...!

சுருக்கம்

vadivelu and singamuthu property problem

காமெடி நடிகர் வடிவேலுவின் உயிர் நண்பராக இருந்தவர் சிங்கமுத்து. பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த இவர், தற்போது சொத்து பிரச்சனைக்கு பிறகு சிங்கமுத்து தனியாக நடித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வடிவேலுவுடன் இவர் நண்பராக இருந்த போது, அவருக்கு பல சொத்துக்கள் வாங்கி கொடுத்தார் சிங்கமுத்து. அவர்  வாங்கி கொடுத்த நிலம் ஒன்றில் காரணமாக வடிவேலுக்கும், சிங்கமுத்துக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிந்தனர். 

ராமச்சந்திரன் என்பவர் தனது 34 சென்ட் நிலத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பி செலுத்தாததால் நிலம் ஏலத்துக்கு வந்தது. அதனை பழனியப்பன் என்பவர் ஏலத்தில் எடுத்தார். 

பழனியப்பன் வசம் நிலம் இருக்கும்போதே உரிமையாளர் ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது உறவினர்கள், அந்த இடத்தை விற்கும் உரிமத்தை நடிகர் சிங்கமுத்துக்கு வழங்கினர். அவர் அதனை வடிவேலுவிடம் விற்றார். 

இதனால் நிலத்தை ஏலம் எடுத்த பழநிப்பபன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வடிவேலு தன்னிடம் போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் நிலத்தை விற்றதாக கூறி 3 கோடி நஷ்டம் கொடுக்க வேண்டும் என கேட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வடிவேலுவும் பழனியப்பனும் ஆஜர் ஆகினர். அப்போது நீதி மன்றத்தில் பேசிய இவர்கள் தாங்களே சமரசமாக பேசி இந்த பிரச்னையை முடித்து கொண்டதாகவும், இரு தரப்பு வழக்கையும் வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கை முடிக்க நீதி மன்றம் உத்தரவிட்டது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!