
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விஜய் டிவியின் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று முடிவடைய உள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பெரிதாக ஆர்வம் காட்டாத ரசிகர்கள் கூட, தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவங்கியுள்ளனர்.
ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு எந்த டாஸ்க்கும் கொடுக்காமல் மிகவும் சுதந்திரமாக விட்டுள்ளனர் நிகழ்ச்சியாளர்கள். மேலும் ஒவ்வொரு நாளும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம், பிக் பாஸ் வீட்டில் இருந்த ஐஸ்வர்யா, விஜி, ரித்விகா, மற்றும் ஜனனி ஆகியோரில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அந்த வகையில், நேற்றைய தினம்... இறுதி மூன்று போட்டியாளர்களில் ஒருவராக கண்டிப்பாக இருப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி ஐயர், மற்ற போட்டியாளர்களுக்கே தெரியாமல், நடனம் ஆடி கொண்டிருக்கும்போதே, கண்களை கட்டி வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்டர். இதை நேரில் பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதே போல் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான நடிகை மும்தாஜ் கண்ணீர் விட்டு அழுதார்.
இதுகுறித்து கமல் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முதல் நாளில் இருந்து ஜனனி மிகவும் கஷ்டப்பட்டவர், வெறும் 45 நாட்கள் மட்டுமே உள்ளே இருந்த விஜி கடைசி மூன்று போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார் ஆனால் இவர் இல்லை, இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது என கூறினார்.
எப்படியோ... ஜனனி வெளியேற்றப்பட்டதால், இறுதி சுற்றுக்குள் நுழையும் போட்டியாளர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.