வருமான வரித்துறை ரெய்டு !! எச்.ராஜாவை செமையா கலாய்த்த விஜய் சேதுபதி…

Published : Sep 29, 2018, 11:15 PM IST
வருமான வரித்துறை  ரெய்டு !! எச்.ராஜாவை செமையா கலாய்த்த விஜய் சேதுபதி…

சுருக்கம்

தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறித்து விளக்கம் அளித்த நடிகர் விஜய் சேதுபதி, இப்போதெல்லாம் தப்பா பேசுனாத்தான் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்றும், கண்டதைப் பேசுவதுதான் டிரெண்ட் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை மறைமுகமாக கிண்டல் அடித்து பேசினார்.

கடந்த இரண்டு நாட்களாக விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செய்திகள் பரவின. ரெய்டு ஏன், எதற்கு என்பதற்கான  எந்தவொரு காரணமுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

அப்போது  விஜய்சேதுபதியிடம் வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். மமதற்கு பதில் அளித்த அவர், என் வீட்டில் நடந்தது ரெய்டு அல்ல, அது சர்வே. என் முகம் தற்போது நிறைய இடத்தில் வருகிறது. அதனால் இவர் கணக்கு வைத்திருக்கிறாரா? இல்லையா? அவருக்கு கணக்கு எழுத வருகிறதா? என்று வைத்த சர்வே தான் அது. பணத்தின் வரவு, செலவு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சோதனை செய்தார்கள்.

வருமானவரித்துறையில் சர்வே என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அப்படி ஒன்று இருப்பதே எனக்கு இப்போது தான் தெரியும். கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரியை முன்னரே கட்டி வந்திருக்கிறேன். அதற்கான ரிட்டன்ஸை என் ஆடிட்டர் தாக்கல் பண்ணவில்லை. அவர் திடீரென்று போய் தாக்கல் செய்துள்ளார். ஆகையால், இதில் ஏற்பட்ட சந்தேகத்தை போக்கும் வகையில் உடனே வந்து எல்லாம் சரியாக இருக்கா என்று சோதனை செய்தார்கள் என்று தெரிவித்தார்.

செய்தி தவறாக பரவினால் மட்டுமே அனைவரிடமும் போய் சேரும். அது ஒரு விளம்பரம் தான். தப்பாக பேசினால் மட்டுமே உடனே போய் சேரமுடியும். காசு கொடுத்தால் கூட அப்படி ஒரு விளம்பரம் கிடைக்காது. நம்மூரில் இப்போது கண்டதைப் பேசினால் தான் பப்ளிசிட்டி என்ற ட்ரெண்ட் இருக்கிறது.

நம்மூரில் கண்டபடி கத்தி பேசிவிட்டு, அதை நான் பேசவில்லை எனது அட்மின் பேசினாரு, மிமிக்ரி பண்ணிவிட்டார்கள் என்று சொல்லலாம். முதலில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது என் வீடு அல்ல. என் வீடு மாதிரி செட் போட்டு, செக் பண்ணியிருக்கிறார்கள்.” என்று விஜய் சேதுபதி கிண்டலடித்தார்.

அண்மையில்  எச்.ராஜா உயர்நீதிமன்றம் குறித்த பேச்சை நான் பேசவில்லை என்று மறுத்தார். இதற்கு முன்னர் பெரியார் சிலை குறித்த சர்ச்சைப் பதிவுக்கு எதிர்ப்பு வந்தவுடன் நான் பதிவிடவில்லை என் அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று பல்டியடித்தார். இதை கிண்டல் செய்து விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!