அட ஸ்டாண்டிங்கில் செம்ம ஸ்மார்ட்டாக போஸ் கொடுக்கும் விஜய்! சர்க்கார் பட நியூ லுக் வெளியானது!

Published : Sep 29, 2018, 07:52 PM IST
அட ஸ்டாண்டிங்கில் செம்ம ஸ்மார்ட்டாக போஸ் கொடுக்கும் விஜய்! சர்க்கார் பட நியூ லுக் வெளியானது!

சுருக்கம்

சர்க்கார் பட, விஜய்யின் நான்காவது போஸ்டர் இன்று சரியாக 6 மணிக்கு வெளியாகி, விஜய் ரசிகர்களால் மிகவும் வைரலாக்கப்பட்டு வருகிறது.   

சர்க்கார் பட, விஜய்யின் நான்காவது போஸ்டர் இன்று சரியாக 6 மணிக்கு வெளியாகி, விஜய் ரசிகர்களால் மிகவும் வைரலாக்கப்பட்டு வருகிறது. 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே இந்தத் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டு புகையை ஊதிக்கொண்டிருக்கும் காட்சி இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 2வது போஸ்டரில் ஒரு காருக்குள் லேப்டாப் ஒன்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றது. மூன்றாவது போஸ்டரில் விஜய் நின்றுகொண்டிருப்பது போல் சைடு போஸ் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்காவது போஸ்டரில் விஜய் செம்ம ஸ்டைலாக , நின்று கொண்டிருக்கிறார். தற்போது இது மிகவும் வைரலாகி வருகிறது.

 

கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில்,  இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ‘பைரவா’ படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!