நானும் ஓவியா ஆர்மிதான் நடிகை பிந்துமாதவி ஓபன்டாக் 

 
Published : Oct 05, 2017, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
நானும் ஓவியா ஆர்மிதான் நடிகை பிந்துமாதவி ஓபன்டாக் 

சுருக்கம்

After exit Biggboss House Bindhu madhavi chat with her fans

விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 வது போட்டியாளராக அந்த வீட்டின் உள்ளே சென்றவர் நடிகை பிந்துமாதவி. ஓவியாவுக்கு கடும்போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் உள்ளே சென்ற புதிதில் காயத்ரி, ஜூலி ஆகியோரைக் கேள்வி கேட்டார். இது ரசிகர்களுக்கு இவர்மேல் ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. ஆனால் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய பின்னும் பிந்து ஆக்டிவாக இயங்கவில்லை.

எனினும் நாட்கள் செல்லச்செல்ல இவரது அமைதி, வையாபுரியுடன் சேர்ந்து இவர் செய்த காமெடிகள் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்தன. குறிப்பாக ஆரவ்-ஹரீஷ்-பிந்து கூட்டணி பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய கலகலப்பை ஏற்படுத்தியது.இறுதியாக பிக்பாஸ் கிராண்ட் பினாலேவுக்கு 2 நாட்கள்முன்னதாக பிந்து எவிக்ட் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் பிக்பாஸ் முடிந்தபின் டுவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்த பிந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுடன் நேற்றிரவு #AskBindhu என்ற ஹேஷ்டேக்கில் சாட் செய்தார்.

பிடித்த நடிகர் 

கோலிவுட்டில் எனக்குப் பிடித்த நடிகர் தளபதி விஜய் சார். நடிகை திரிஷா மிகவும் அழகானவர். பிக்பாஸ் அனுபவம் எனக்கு மறக்க முடியாத நினைவுகளை அளித்துள்ளது. வாழ்க்கை என்றால் என்னவென்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

ஆரவ்-ஹரீஷ் 

ஆரவ், ஹரீஷ் இருவருமே எனக்கு பிடித்தமானவர்கள். ஹரீஷுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஹரீஷ் எனது நல்ல நண்பர்களில் ஒருவர். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருமே எனக்கு பிடித்தமானவர்கள்.

ஓவியா 

நானும் ஓவியா ஆர்மியின் ஒரு மெம்பர் தான். ஓவியா ஒரு அற்புதமான பெண்மணி. ஜூலி ஒரு நல்ல தோழி. எனது அடுத்த திட்டம் என்னவென்பதை இதுவரை நான் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு நடிகை பிந்துமாதவி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்