
தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் விஷால் எடுத்த அதிரடி முடிவால் விஜய்யின் ‘மெர்சல்’ திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ வரும் தீபாவளி தினமான அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் ரிலீசுக்கு தேவையான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது.
இன்னும் ஓரிரு நாட்களில் படத்தை சென்சாருக்கும் அனுப்ப இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கக் கூட்டம் தலைவர் விஷால் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை (அக்டோபர் 6) முதல் எந்த புதிய திரைப்படங்களும் வெளியிடப்படமாட்டாது என்று தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுளள நிலையில் தற்போது தமிழக அரசு மேலும் 10% கேளிக்கை வரிகள் தமிழ்ப் படங்களுக்கும், 20% பிற மொழி படங்களுக்கும் விதித்துள்ளதை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொல்லிக்குறாங்க.
விஷாலின் இந்த முடிவால் ‘மெர்சல்’ திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.