
கெளதம் கார்த்தி நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. பின், உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்க வில்லை என்றாலும், அராஜகமாக நடந்துகொண்ட ஐஸ்வர்யாவிற்கு சப்போர்ட் செய்ததால் இவர் மீதும் பலர் தங்களுடைய கோபத்தை காட்டினர்.
இதன் விளைவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதி இருந்தும், குறைவான வாக்குகளை பெற்று, இறுதி வாரங்களில் வெளியேற்றப்பட்டார்.
மேலும் தற்போது நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும், தொடர்ந்து அடுக்கடுக்காக பல படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் யாஷிகா.
இந்நிலையில் யாஷிகா திடீர் என ரசிகர்களுடன், சமூகவலைதளத்தில் லைவ் சாட் செய்தார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மிகவும் கூலாக பதில் அளித்தார். யாஷிகாவிடம் இந்த லைவ் சாட்டிங் போது , ரசிகர் ஒருவர் "யாஷிகா உங்களுடைய தொப்புளில் எப்போது வளையம் போட்டீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு" யாஷிகா சற்றும் கூச்சம்மின்றி அதெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே போட்டு விட்டேன். என பதில் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.