
பிக் பாஸ் சீசன் 2 நேற்று தொடங்கிய நிலையில் முதல் கண்டெஸ்டன்ட்டாக உள்ளே நுழைந்த இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி யாஷிகா ஆனந்த், சொப்பன சுந்தரி நான்தானே பாடலுக்கு நடனமாடிஅதிரடியாக என்ட்ரி ஆனார். அவர் என்ட்ரி ஆன அடுத்த 5 ஆவது நிமிடத்தில் சமூக வலைதளங்களில் தலைவி யாஷிகா ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விஜய் தெதலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். முதலில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், கமல்ஹாசனின் அறிவுப்பூர்வமான பேச்சால் நிகழ்ச்சி களை கட்டியது. டிஆர்பியில் செம ரேட்டிங் கிடைத்து.
அந்த சீசனில் பங்கேற்ற நடிகை ஓவியா மிகப் பெரிய அளவில் புகழ் பெற்றார். ஓவியா ஆர்மி தொடங்கி அவரை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் 2 பிரமாண்டமாக தொடங்கியது. நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கப்பட்டுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் . 16 போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளா்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சினிமா, ஆா்.ஜே., வி.ஜே. என குறிப்பிட்ட பின்புலத்தை கொண்டவா்களாக அமைந்துள்ளனா்.
இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யாஷிகா ஆனந்த், அறிமுகக் காட்சியின்போது சொப்பன சுந்திரி நான்தேனே என்ற பாடலுக்கு நடனமாடி, அனைவரையும் சில நிமிடங்களில் கவர்ந்தார். செமையாக என்ட்ரி கொடுத்த அவருக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே நடிகை ஓவியா போல், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யாஷிகா ஆர்மி தொடங்கி உள்ளனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.