உங்கள் பட  டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று கூட வாழ்ந்துள்ளேன்...! உருக்கமாக பேசிய பிக் பாஸ் போட்டியாளர்..!

 
Published : Jun 17, 2018, 10:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
உங்கள் பட  டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று கூட வாழ்ந்துள்ளேன்...! உருக்கமாக பேசிய பிக் பாஸ் போட்டியாளர்..!

சுருக்கம்

actor senrayan talk in kamalhassan

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில், வரும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக 'மூடர்கூடம்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் சென்ராயனும் கலந்துக்கொண்டுள்ளார்.

சிறு, ஆட்டம், பாட்டத்தோடு இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி ஆன இவர், தொகுப்பாளர் கமலஹாசனை சந்தித்து பேசிய போது அவருக்கு கை, கால்களே, உதறல் எடுத்து விட்டது.

இவரின் படபடப்பை உணர்ந்த கமல்ஹாசன் தோழமையோடு , சென்ராயன் தோல் மீது கையை போட்டு ஏதாவது சொல்லுங்கள் என்று கூறினார். சென்ராயன் அவரை பற்றி சொல்ல துவங்கினார்.

இவர் கமல்ஹாசனிடம் பேசியது..."சார் என்னுடைய பெயர் சென்ராயன், என்னுடைய சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனுர். சினிமாவின் மீது கொண்ட ஆசையால் சென்னை வந்து, 10 வருடங்களுக்கு பின் தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்ததாக கூறினார்.

பின் தான் முதல்முதலாக பார்த்த திரைப்படம், அபூர்வசகோதரர்கள் என்றும், இரண்டாவதாக பார்த்த படம் சிங்காரவேலன் என்று கூறினார். அதேபோல் தான் சென்னைக்கு வந்ததும் முதல் முதலில் பார்த்த திரைப்படம் 'குருதிபுனல்' என்று கூறினார்.

இதைதொடர்ந்து, தான் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்ட நேரத்தில், உங்களில் திரைப்படங்களின் டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று கூட தன்னுடைய வாழ்க்கயை ஓட்டி உள்ளதாக மிகவும் உணர்சி வசத்தோடு கூறினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ
தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!