கமல் கேள்வியை மதிக்காமல் வெளியே போக சொன்ன பிக் பாஸ்...!

 
Published : Jun 17, 2018, 07:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
கமல் கேள்வியை மதிக்காமல் வெளியே போக சொன்ன பிக் பாஸ்...!

சுருக்கம்

big boss not respect the kamalhaassan word

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் சரியாக இன்று 7 மணிக்கு துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் எப்போதும் போல் ரசிகர்களின் ஆரவாரத்தோடு வெள்ளை நிறக் காரில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் கமலஹாசன். சில வார்த்தைகள் ரசிகர்களிடம் பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் கலந்து கொண்டு 100 நாட்கள் தங்கப்போகும் பிக்பாஸ் வீட்டை சுற்றிக் காட்டினார்.

வீட்டின் உள்ளே நுழைந்ததுமே பிக்பாஸ் என்று எழுதப்பட்டிருந்த பெயர் பலகையை படித்து விட்டு 'மலரும் நினைவுகள்' என்று பழைய நினைவுகளை அசைப்போட்டார்.

பின் பிக் பாஸ் வீட்டில், உள்ள பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கண்டு அதனை ரசிகர்களுக்கு விளக்கி கூறினார். பிக்பாஸ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள, கிச்சன் பகுதி, பெண் போட்டியாளர்கள் படுக்கை அரை, மற்றும் ஆண் போட்டியாளர்கள் படுக்கை அறை ஆகியவற்றை சுற்றி காட்டிய பின்பு பிக்பாஸ் கன்பஷன் அறைக்கு சென்றார். 

அங்கு உள்ளே சென்றதுமே... கமல், எப்படி இருக்கீங்க பிக் பாஸ் நான் வெளியில் சென்று அரசியல் போன்ற பல்வேறு வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறேன், நீங்கள் யாரிடம் கேள்வி கேட்காமல் எப்படி இருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பிக் பாஸ் நீங்கள் பிக் பாஸ் நிகழ்சிக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் என்று கூறி, நீங்கள் வெளியே போகலாம் என கூறி, கமலின் வார்த்தைக்கு பதில் கொடுக்காமல் வெளியேற்றிவிட்டது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!