
யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் KGF. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து உள்ளார். மேலும் புவன் கவுடா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.
உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாகி இருக்கும் இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருவதால், இப்படம் வசூலிலும் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இப்படத்துக்கு போட்டியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், அடுத்தடுத்த நாட்களில் கே.ஜி.எஃப் 2 படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அடுத்ததாக அப்படத்தின் 3-ம் பாகமும் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதியில் அதற்கான ஹிண்ட்டும் இடம்பெற்று உள்ளதால் உற்சாகமடைந்த ரசிகர்கள், அப்படத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுக்குமாறு படக்குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... KGF 2 Review : ‘பீஸ்ட்’-ஐ பீட் பண்ணுமா கே.ஜி.எஃப் 2... படம் அசத்தலா? சொதப்பலா? - முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.