"Writer: போலீஸ்ல அதிகாரத்துல இல்லாத எல்லாருமே அடியாள்தான்" காவலர்களின் நிலையை தோலுரிக்கும் "ரைட்டர் "டீஸர்!!

By Kanmani PFirst Published Dec 7, 2021, 7:13 AM IST
Highlights

"Writer Teaser" :  பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக தயாரித்து வரும் சமுத்திர கனியின் ரைட்டர் பட டீஸர் வெளியாகியுள்ளது.
 

சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைகள் கிட அடித்தே வருகிறது என்று சொல்லலாம். அந்தவகையில் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி விடுதலை என்னும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதற்கிடையே இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் தான் உருவாக்கி வரும் ‘ரைட்டர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதன்  படப்பிடிப்பு புகைப்படங்களும் சமீபத்தில்  வைரலாகி இருந்தது.. இதில், சமுத்திரக்கனி காவலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகிய 5 இயக்குநர்களின் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதன்படி  நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. 

"ரைட்டர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தாநாளில் வெளியாகி எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.  இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என அறிவிக்கப்ட்டுள்ளது.

கனவுடன் காவல்துறையில் பணிக்கு வரும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை காவலர்களின் கனவுகள் உடையும் விதத்தை காட்டும் கருவை கொண்டுள்ள இந்த படத்தில் காவல்நிலையத்தில் ரைட்டராக பணிபுரியும் காவலர் ஒருவர் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்படும் வழக்கை தனது சொந்த முயற்சியில் கண்டுபிடிக்கிறார். அதனை அறிந்த மேல் அதிகாரிகளுக்கும் ரைட்டருக்கும் இடையேயான போர்க்களமாக இந்த "ரைட்டர்" படம் உருவாகியுள்ளது. 

இந்த நிலையில், நேற்று இதன் டீசர் வெளியானது..  நேர்மையான ரைட்டர் தங்கராஜாக நடித்துள்ள சமுத்திரக்கனி காவல்நிலையத்தில் உயரதிகாரிகள் எழுதச் சொல்வதை அப்படியே எழுதும் ரைட்டராய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் வெளிச்சத்தையூட்டும் காவலராக நடித்து மிளிர்கிறார்.

"’போலீஸ்ல அதிகாரத்துல இல்லாத எல்லாருமே அடியாள்தான்... நான் பழைய அடியாள் நீ புதுசா வந்திருக்க அடியாள்... அவ்வளவுதான்’ போன்ற வசனங்கள்காவல்நிலைய அவலங்களை வெளிக்கொணர்வதாகவே உள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.

 

click me!