டிசம்பர் 23-ந் தேதி எல்லாரும் வந்துருங்க... ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா

By Ganesh PerumalFirst Published Dec 6, 2021, 8:50 PM IST
Highlights

கோலிவுட்டில் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவனும் (vignesh shivan), நயன்தாராவும் (Nayanthara) ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 வருடமாக காதலித்து வருகின்றனர். காதலைப் போல் சினிமாவிலும் ஜொலித்து வரும் இவர், கடந்தாண்டு ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை தொடங்கினர். அந்நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.

அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' (Rocky) படத்தின் வெளியீட்டு உரிமையையும் அவர்கள் கடந்தாண்டு கைப்பற்றினர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை கடந்த ஓராண்டாக வெளியிடாமல் இருந்தனர்.

இந்நிலையில், தற்போது ராக்கி படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் தவறாமல் தியேட்டருக்கு வந்து இப்படத்தை கண்டுகளிக்குமாறு விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனும், விக்னேஷ் சிவனும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அதனால் நண்பனுக்காக அந்த படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!