Katrina Kaif Wedding: கத்ரீனா - விக்கி திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி கொடுக்க தயாராக இருக்கும் ஓடிடி நிறுவனம்?

Published : Dec 06, 2021, 08:17 PM IST
Katrina Kaif Wedding: கத்ரீனா - விக்கி திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி கொடுக்க தயாராக இருக்கும் ஓடிடி நிறுவனம்?

சுருக்கம்

இந்த ஜோடி தங்கள் திருமணத்தின் காட்சி உரிமையை சர்வதேச பத்திரிகைக்கு வழங்கியதாக ஒரு செய்தியில் கூறப்பட்டது. இருப்பினும், இப்போது OTT நிறுவனம் ஒன்று கத்ரீனா-விக்கி ஜோடி திருமண காட்சிகளைப் பெற ரூ.100 கோடி வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 9 ஆம் தேதி, நடிகை கத்ரீனா கைஃப் சொந்த பந்தங்கள் சூழ அனைவரது ஆசீர்வாதத்துடன் அக்னி சாட்சியாக காதலன் கத்ரீனாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். கத்ரீனாவும், விக்கியும் முதலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். பின்னர் இருவரும் கிறிஸ்துவ முறைப்படி வெள்ளை திருமணமும் செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.  கத்ரீனா-விக்கியின் திருமண புகைப்படங்களைப் பார்க்க இருவரது ரசிகர்களும் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

ஆனால் இதனை விரும்பாத இந்த ஜோடி திருமணம் நடக்கும் இடத்தில், எந்த வகையான மொபைல் அல்லது கேமராவையும் அனுமதிக்க தடை விதித்துள்ளனர். இதனுடன், திருமணத்தை நடத்தும் ஏஜென்சி எந்த சூழ்நிலையிலும் புகைப்படங்களை கசிய விடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த ஜோடி தங்கள் திருமணத்தின் காட்சி உரிமையை சர்வதேச பத்திரிகைக்கு வழங்கியதாக ஒரு செய்தியில் கூறப்பட்டது. இருப்பினும், இப்போது OTT நிறுவனம் ஒன்று கத்ரீனா-விக்கி ஜோடி திருமண காட்சிகளைப் பெற ரூ.100 கோடி வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பொழுதுபோக்கு போர்ட்டலான பிங்க்வில்லாவின் தகவல் படி, முன்னணி OTT தளம் கத்ரீனா-விக்கியின் திருமணத்தின் பிரத்யேக காட்சிகளைப் பெற இந்த ஜோடிக்கு 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த OTT இயங்குதளமானது, இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை OTT இல் ஸ்ட்ரீம் செய்ய விருப்பம் தெரிவித்து, அதற்காக பெரும் தொகையைச் செலுத்த தயாராக உள்ளனர்.

கத்ரீனா-விக்கி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால், இந்த OTT தளம் இந்த ஜோடியின் அனைத்து திருமண செயல்பாடுகளையும் படமாக்கி எடிட்டிங் செய்த பிறகு ஒரு திரைப்படம் போல ஸ்ட்ரீம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரலைத் தருணங்களைத் தவிர, குடும்ப உறுப்பினர்கள், விருந்தினர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஒப்பனையாளர்கள் மற்றும் திருமண இடத்தில் இருக்கும் நபர்களின் நேர்காணல்களையும் இந்தக் காட்சிகள் உள்ளடக்கும். ஆனால், இதுவரை கத்ரீனாவும், விக்கியும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிபிடித்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!
2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கி கல்லாகட்டிய டாப் 5 தமிழ் ஹீரோஸ்... ரஜினியை முந்திய அஜித்..!