பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கையில் போங்கு ஆட்டமா?... யார்தான் வின்னர்?? பிரபல எழுத்தாளர் என்ன சொல்கிறார்?...

Published : Oct 02, 2019, 12:34 PM IST
பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கையில் போங்கு ஆட்டமா?... யார்தான் வின்னர்?? பிரபல எழுத்தாளர் என்ன சொல்கிறார்?...

சுருக்கம்

ஒரு போட்டியாளர் வெளியேறுவது என்பது முழுக்க முழுக்க பார்வையாளர்களின் ஓட்டுகளைப் பொறுத்தே இருக்கிறது. இந்த ஓட்டுகள், இவற்றின் எண்ணிக்கை எல்லாமே மிகவும் வெளிப்படையாக நடக்கின்றன. இதற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்குமே சம்பந்தம் இல்லை. இந்த ஓட்டு எண்ணிக்கை விஷயத்தை பிக்பாஸ் குழுவினர் வேறு ஒரு நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். அங்கே எல்லாம் போங்கு ஆட்டம் ஆட முடியாது. எல்லாமே வெளிப்படைதான். யார் வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம்.

இந்த சீஸனின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 5 தினங்களே இருக்கும் நிலையில்,  சேரன், கவின்,தர்ஷன் ஆகியோர் வெளியேற்றத்துக்குப் பின்னர் அங்கு நடக்கும் ஓட்டு எண்ணிக்கை என்பது சும்மா கந்துடைப்பு என்கிற புகார்கள் அதிகம் எழுந்துள்ள நிலையில், பிரபல  எழுத்தாளர் சாரு நிவேதிதா அது குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களைப் பத்விட்டிருக்கிறார்.

அப்பதிவில்,...நேற்று பிக்பாஸ்-3க்கு வெளியே உள்ள, ஆனால் பிக்பாஸ் குழுவுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். நண்பர் எனக்கு மிகவும் வேண்டியவர். தெரிந்ததை மட்டுமே பேசுவார். தெரியாத விஷயத்தைப் பற்றி வாயே திறக்க மாட்டார். பிக்பாஸ்-3இல் தர்ஷன் வெளியேறியது பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகளும் தவறு என்றார் நண்பர். ஏனென்றால், ஒரு போட்டியாளர் வெளியேறுவது என்பது முழுக்க முழுக்க பார்வையாளர்களின் ஓட்டுகளைப் பொறுத்தே இருக்கிறது. இந்த ஓட்டுகள், இவற்றின் எண்ணிக்கை எல்லாமே மிகவும் வெளிப்படையாக நடக்கின்றன. இதற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்குமே சம்பந்தம் இல்லை. இந்த ஓட்டு எண்ணிக்கை விஷயத்தை பிக்பாஸ் குழுவினர் வேறு ஒரு நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். அங்கே எல்லாம் போங்கு ஆட்டம் ஆட முடியாது. எல்லாமே வெளிப்படைதான். யார் வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம்.

இரண்டாவது – இதுதான் முக்கியமான விஷயம் – தர்ஷனிடம் அறம் இல்லை. சாண்டியிடம் அல்லது முகினிடம் அது உள்ளது. தப்போ சரியோ அவர்கள் இருவரும் தாங்கள் நம்புவதை செய்கிறார்கள். தர்ஷனுக்கு எது பற்றியும் அபிப்பிராயம் இல்லை. முன்பு கணேஷ் ராம் என்று ஒருத்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் கலவரமே நடந்தாலும் அவர் பாட்டுக்கு யோகா பண்ணிக் கொண்டோ சாப்பிட்டுக் கொண்டோ இருந்தாரே, கிட்டத்தட்ட அவர் மாதிரி கேரக்டர்தான் தர்ஷன். அவர் அளவுக்கு இல்லை என்றாலும் அவருடைய சாயல் இருந்தது. நடவடிக்கைகளில்.

மூன்றாவது – இது மேலே சொன்ன இரண்டையும் விட முக்கியமானது. தர்ஷனுக்கு பலரும் ஓட்டுப் போடவில்லை. எல்லோருக்குமே தர்ஷன் தான் ஜெயிக்கப் போகிறார் என்ற நினைப்பு இருந்ததால் யாருமே ஓட்டுப் போடவில்லை. முயல் ஆமை கதைதான். இதுதான் மிக முக்கியமான காரணம்.எனவே நான் முன்பு எழுதியிருந்த பதிவுகளை நீக்கி விட்டேன்.

இந்த முறை சாண்டிதான் வெல்வார். அல்லது, முகின். இது பார்வையாளர்களின் மனோநிலை பற்றி ஆய்வு செய்த என்னுடைய கணிப்பு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!