“இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்..?!” இது ரஜினிக்கு தெரியுமா பாஸ்..? கோலிவுட் ஹாட் டாக்..!

Published : Feb 28, 2022, 01:04 PM IST
“இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்..?!” இது ரஜினிக்கு தெரியுமா பாஸ்..? கோலிவுட் ஹாட் டாக்..!

சுருக்கம்

தனுஷின் அடுத்த படத்தில் டைட்டில் கார்டில் “இளைய சூப்பர் ஸ்டார்” என்ற பட்டம் இடம்பெற உள்ளதாக கோடம்பாக்கம் முழுவது கிசுகிசுக்கப்படுகிறது

ரஜினியின் மகளை மணந்துகொண்ட பிறகு அவரது ரசிகர்களுக்கும் செல்லப்பிள்ளை ஆனார் தனுஷ். அவரது சினிமா வாழ்கை பெரும் உச்சம் தொட ஆரம்பித்தது திருமணத்துக்குப் பிறகு தான். குறிப்பாக மாமனார் ரஜினிகாந்த் தனக்கு ஆசையாக ஒரு ருத்ராட்சம் கொடுத்ததாகவும், அந்த ருத்ராட்சத்தை மாலையாக கழுத்தில் அணிந்த பிறகு தான் தனக்கு சினிமாவில் பெரும் வெற்றிகள் கிடைத்ததாகவும் தனுஷே பேட்டியில் கூறியுள்ளார். இந்தநிலையில் தனுஷ் - ஐஷ்வர்யா தம்பதியரின் பிரிவு முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்த, ரஜினி ரசிகர்களோ, “தலைவரின் மகளை வேண்டாம்னு சொல்லிட்டியே தனுஷ, அவரு கொடுத்த ராசியான ருத்ராட்சத்தை ஏன் கழுத்தில போட்டிருக்க. அவரோட பொண்ணு வேண்டாம், அதிர்ஷ்டம் மட்டும் வேணுமா உனக்கு” என்று சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்தனர் தனுஷை.

ஒரு ருத்ராட்சத்துக்கே இவ்வளவு பஞ்சாயத்து இருக்கும் போது, ’சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம். கடந்த 2019ம் ஆண்டு தனுஷ் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது 39வது பிறந்தநாள் வந்தது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு, பெரிய விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். விழா மேடையில் சூப்பர் ஸ்டாரின் சினிமா வாரிசாக பார்க்கப்பட்ட தனுஷுக்கு ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்தார். ஆனால் மேடையிலேயே அந்த பட்டத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் தனுஷ். என்றாலும் ரசிகர்க்ள் விடவில்லை. அசுரன் படம் ரிலீஸான போது நெல்லையில் ஒரு திரையரங்கில் “இளைய சூப்பர்ஸ்டார் தனுஷ்” என்று டைட்டில் போட்டு ரசிகர்கள் கொண்டாடுவது வைரலாக, பெரும் சர்ச்சை கிளம்பியது. பிறகு அது ரசிகர்கள் கொண்டாடுவதற்காக திரையிடப்பட்ட பிரத்யேக வீடியோ என்பது தெரியவந்தது.

கடந்த 2021ம் ஆண்டும் இதேபோன்ற இளைய சூப்பர்ஸ்டார் சர்ச்சை தனுஷை சுற்றியது. ஆனால், சூப்பர் ஸ்டார் மகளை பிரிந்து தனியாக வாழும் இந்த நேரத்தில், அவர்களை சேர்த்து வைக்க குடும்பம் மற்றும் திரைத்துறை நண்பர்கள் அனைவரும் கடுமையா முயன்று வருகின்றனர். ஆனால் தனுஷ் மீண்டும் ஐஷ்வர்யாவுடன் சேர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நேரத்தில் தனது அடுத்த படத்தில், “இளைய சூப்பர் ஸ்டார் - தனுஷ்” என்று டைட்டில் கார்ட் போட தனுஷ் சம்மதம் தெரிவித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது. ”இது நடிப்பில் நானும் ரஜினிக்கு நிகரானவந்தான் என்று காட்டுவதற்காகவா, அல்லது ஏதாவது சொந்த பகை காரணமாக வெறுப்பேற்றவா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு பெரும் சர்ச்சை கிளம்பப்போவதும், தனுஷ்-ஐஷ்வர்யாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் இடியாய் இந்த விவகாராம் விழப்போவது உறுதி. ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Nagabandham Review : நாகபந்தம் படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Box Office Clash: பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு டஃப் போட்டி.. குறுக்கே வந்த தனுஷ், சிரஞ்சீவி.. சாதனை படைக்குமா ஜெயிலர் 2?