வாவ்...கண் அசைவுகளால் கவரும் மீனா... எம்மாடி எவ்ளோ நேரம்...

Kanmani P   | Asianet News
Published : Feb 28, 2022, 12:36 PM IST
வாவ்...கண் அசைவுகளால் கவரும் மீனா... எம்மாடி எவ்ளோ நேரம்...

சுருக்கம்

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நடிகை மீனா தனது இன்ஸ்டா சேலஞ்ச் வீடியோவை கம்பிளிட் செய்துள்ளார்... 

80 களில் துவங்கி இன்று வரை பிரபல நடிகையாக வளம் வருபவர் கண்ணழகி மீனா...1982 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான சிவாஜி  நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் பல இந்தி படங்களில் நடித்துள்ளார். 90களில் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த மீனா நடிப்பு தவிர, பின்னணிப் பாடகி , தொலைக்காட்சி நடுவர் மற்றும் அவ்வப்போது டப்பிங் கலைஞர்என பன்முக காட்டி வந்தவர்.. திறமைக்கு கிடைத்த பரிசாக அவர் தென் பிலிம்பேர் விருதுகள் , தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் , நந்தி விருது , சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் மற்றும் பல விருதுகளை தட்டி துக்கியுள்ளார்.

ரஜினிகாந்துடன் எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள  மீனா பின்னாட்களில் நாயகியை அறிமுகமாகி ரஜினியுடன் பல ஹிட்களை கொடுத்தார்..

 கஸ்தூரி ராஜா இயக்கிய  என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக  நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமான மீனா.. ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி , சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், கிருஷ்ணா,  பாலகிருஷ்ணா, ரவிச்சந்திரன், விஜயகாந்த், நாகார்ஜுனா, வெங்கடேஷ், விஜய், அஜித்குமார், சத்யராஜ், பிரபுதேவா, கே . பாக்யராஜ், ஜெயராம், சுரேஷ் கோபி, பிரசாந்த் , ஹரிஷ் குமார், கிச்சா சுதீப், ரவிதேஜா உள்ளிட்ட பல ஸ்டாருக்களுக்கு நாயகியாக நடித்துள்ளார்..

ஆனால் மீனாவுக்கு உண்மையான அங்கீகாரத்தையும் புகழையும் கொண்டு வந்த படம் ரஜினியின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றான முத்து . இப்படம் ஜப்பான் முழுவதும் வெற்றி பெற்றது. நாயகியான ரங்கநாயகி தெரு நாடக நடிகையாக பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். இத்திரைப்படம் கே.எஸ்.ரவிக்குமாரால் இயக்கப்பட்டது மற்றும் கே.பாலசந்தரால் தயாரிக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் அத்தை பொண்ணாக சில மணி நேரம் தோன்றி ரசிகர்களை கவர்ந்திருந்தார் மீனா..இந்நிலையில் இன்ஸ்டாவில் பரவும் சேலஞ்ச் ஒன்றை மேற்கொண்டுள்ள மீனா..இது குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்...பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சேலஞ்சை முடித்த மீனாவின் வீடியோ லைக்குகளை அள்ளி வருகிறது...     

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பகையை மறந்து பாசமழை பொழிந்த சரவணன்... மகிழ்ச்சி தாண்டவம் ஆடிய தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
‘பனிவிழும் மலர்வனம்’ பின்னணியில் நடந்த சுவாரஸ்யம்.! திரைப்பட பாடகி ஜானகி வெளிப்படுத்திய யாருக்கும் தெரியாத ரகசியம்!