கமல்ஹாசன் திடீரென மல்டி லெவலில் பணம் சம்பாதிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்...
கமல்ஹாசன் திடீரென மல்டி லெவலில் பணம் சம்பாதிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். பிக்பாஸ் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருபவர், தன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வருகிறார். இப்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தின் பார்ட்னர் தயாரிப்பாளராக ஆகியிருக்கும் கமல், கதர் துணியை சர்வதேச அளவில் விற்பனை செய்யும் நிறுவனத்தை துவக்கியுள்ளார். இது போதாதென்று, தனது சிறப்பான பழைய சினிமாக்களுக்கு ரீமேக் உரிமைகளை பல மொழி தயாரிப்பாளர்களுக்கு வழங்க துவங்கியுள்ளார். அந்த வகையில் முதலில் ஹிந்தியில் ஒரு படம் ரீமேக் ஆகிறது.
தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து நிற்பதை நாடே மாய்ந்து மாய்ந்து பேசிவருகிறது. ஆனால் அவரோ அடுத்தடுத்து பல மொழி படங்களில் பிஸியாக கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு படங்களுக்கு அடுத்து மீண்டும் ஒரு இந்திப் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அவரது ஃபேவரைட் இந்தி இயக்குநரான ஆனந்த் எல் ராயோடு மூன்றாவது முறையாக இணைகிறார்.
(காஸ்ட்யூம் டிஸைனர் யாரு ஐஸ்வர்யாவா சார்?)
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை ஹீரோயினாக மாறி இப்போது சினிமா ஹீரோயினாக பிஸியாக வலம் வருகிறார் பிரியா பவானி சங்கர். ’ஓ மணப்பெண்ணே’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஹரீஸ் கல்யாணுடன் ப்ரியா ஓவர் நெருக்கம் காட்டியதால் பிரியாவின் பழைய காதல் பிரேக்-அப் ஆனது! என பேசப்பட்டது. ஆனால் இப்போது தனது காதலரின் பிறந்தநாளுக்கு சென்சேஷனலாக ஒரு வாழ்த்து செய்தியை போட்டு, கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
(ஆனாலும் லவ்வருக்கு பிடிக்காத ஒரு போட்டோவை போட்டு, சூடேத்துனது ஏன் பிரியா?)
இந்திய அளவில் பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன். இவரது மகள் கல்யாணி கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் துவக்கத்தில் அவர் நடித்த படங்கள் ஜொலிக்கவில்லை. தமிழில் சிவகார்த்தியோடு அவர் நடித்த ‘ஹீரோ’ படமும் ஹிட்டாகவில்லை. அதனால் அவரை ‘ராசியில்லா நடிகை’ என கூட முத்திரை குத்த பார்த்தனர். ஆனால் சமீபத்தில் கல்யாணி நடித்து வெளியான மாநாடு, மரைக்கயார், ஹிருதயம், ப்ரோ டாடி என வரிசையாக நான்குமே தடம் பதித்துள்ளன. கல்யாணி செம்ம ஹாப்பி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.