தமிழ் திரையுலகில் சின்மயிக்கு தடை ஏன்? இதுதான் காரணமா?

Published : Jun 03, 2025, 12:55 PM ISTUpdated : Jun 03, 2025, 12:56 PM IST
Chinmayi

சுருக்கம்

சின்மயிக்கு ஏன் தமிழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சின்மயிக்கு தமிழில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏன்?
 

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி “முத்த மழை..” பாடலைப் பாடினார். அதுதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. நல்ல குரல் வளம் கொண்ட பாடகி சின்மயிக்கு ஏன் தமிழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சின்மயிக்கு தடை விதித்த நடிகர் சங்கம்

2002-ம் ஆண்டு வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் “ஒரு தெய்வம் தந்த பூவே..” என்கிற பாடலை பாடியதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் சின்மயி. அதன் பின்னர் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஆனால் சின்மயிக்கு டப்பிங் மற்றும் பாடுவதற்கு தமிழ் திரையுலகில் தடை விதைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சின்மயிக்கு தடை விதித்த அப்போதைய நடிகர் சங்க செயலாளார் ராதாரவியிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

சந்தா பிரச்சனையால் விலக்கப்பட்ட சின்மயி

அதற்கு பதில் அளித்த ராதாரவி, சின்மயி ஆண்டு சந்தாவை சரியாக கட்டவில்லை. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் எங்களிடம் எதுவும் பேசாமல் அவர் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். அங்கே வாழ்நாள் சந்தாவை முழுவதுமாக கட்டி விட்டதாக பொய் கூறினார். இதனால் தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என விளக்கம் அளித்திருந்தார். ஆனால் ராதாரவியின் இந்த பதிலுக்கு நெறியாளர் எதிர்வினை ஆற்றினார். சந்தா கட்டச் சொல்லி இருந்தாலே பிரச்சினை முடிந்திருக்கும். அதை விட்டுவிட்டு ஒருவரின் வாழ்க்கையை அடியோடு அழிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி விளக்கம்

இந்தக் கேள்வியால் கோபமடைந்த ராதாரவி, “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இதற்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இது தேவையில்லாத வேஸ்ட் டாப்பிக். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசியிருக்கிறார். இதற்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த ராதாரவி, “சென்னையில் 70 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறார். ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். டப்பிங் யூனியனுக்கு அவரால் 10% கமிஷன் வருகிறது. லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் சின்மயினால் ரூ.250 கட்ட முடியாதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

வைரமுத்துவுடன் ஏற்பட்ட மோதல்தான் காரணமா?

இதற்கு அப்போது விளக்கம் அளித்து இருந்த சின்மயி, டப்பிங் யூனியிலிருந்து ஸ்ருதிஹாசன், நடிகர் விஜய், பாடகர் கார்த்திக் ஆகியோருக்கு சந்தா கட்டிக் கொள்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் கட்டவில்லை? என பதிலுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். ரூ.250-க்காக டப்பிங் மற்றும் பாடல் துறையில் இருந்து சின்மியக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் உண்மையான காரணம் அவருக்கு Mee Too பிரச்சனையில் வைரமுத்து உடன் ஏற்பட்ட மோதல்தான் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?