கோலிவுட்டில் உருவாகும் புது கூட்டணி; ரவி மோகன் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

Published : Jun 03, 2025, 12:08 PM IST
Ravi Mohan

சுருக்கம்

நடிகர் ரவி மோகன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ravi Mohan & S.J. Suryah Team Up for Double Hero Film Directed by Karthik Yogi : நடிகர் ரவி மோகன், விவாகரத்து விவகாரம் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், மறுபுறம் அவர் நடிப்பில் பிசியாக இருக்கிறார். அவர் நடித்துள்ள 'கராத்தே பாபு' என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு அரசியல் த்ரில்லர் படமாகும். ரவி மோகன் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். கணேஷ் பாபு இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் சக்தி வாசுதேவன், கே.எஸ். ரவிக்குமார், வி.டி.வி. கணேஷ், சுப்ரமணிய சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ் ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜ், ஸ்ரீதன்யா, சாம் ஆண்டர்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதுதவிர நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க ரவி மோகன் திட்டமிட்டுள்ளார். 2019 இல் வெளியான பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' படத்தில் யோகி பாபுவும், ரவியும் இணைந்து நடித்திருந்தனர். இவர்களது காம்பினேஷனால் அப்படம் வசூலில் பெரும் வெற்றி பெற்றது. இதனால் அந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ரவி மோகன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் எஸ்.ஜே.சூர்யா

இந்நிலையில், ரவி மோகன் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படம் பற்றிய மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை கார்த்திக் யோகி இயக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தை டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஆக அவர் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு ஒரு ஹீரோவாக ரவி மோகன் கமிட்டாகிவிட்ட நிலையில், அவருடன் மற்றொரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதே இல்லை. இந்த கூட்டணி உறுதியானால் ரவி மோகனும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த ஜனவரி மாதம் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். 'காதலிக்க நேரமில்லை' படத்தின் வெளியீட்டிற்கு முன்பே இவர் பெயரை மாற்றினார். ஆனால், இப்படம் தோல்வியடைந்தது. கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படம் வெறும் 9.67 கோடி மட்டுமே வசூலித்தது. அதுமட்டுமின்றி ரவி மோகன் அதற்கு முன் நடித்த 'பிரதர்' படமும் தோல்வியடைந்தது. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?